Ads (728x90)

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால், நல்லெண்ண நோக்கில் அரசாங்கத்தை பாதுகாத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இந்த அரசாங்கம் ஏமாற்றி அந்தரத்தில் விட்டுள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினைகளையும் இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது. இதையிட்டு தான் வெட்கமடைவதாக அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் விசனம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள நான் வரும் முன்னர் நானும், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் கலந்துரையாடினோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒரு முழுநேர கணக்காளர் ஒருவரை நியமிப்பதாக அரசாங்கத்தின் துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தன எழுத்து மூலமாக கூட்டமைப்புக்கு உறுதி கூறியுள்ளாரென அவர் எனக்கு கூறினார். அந்தக் கடிதத்தை நானும் நேரடியாக வாசித்தேன்.

இந்த நியமனம் அது இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் சுமந்திரன் குற்றம் சாட்டினார். இதற்கு துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் என்ன பதில் கூறுகிறீர்கள் என நான் இங்கே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இன்று எங்கள் பிரச்சினைகளை நீங்கள் பின்வரிசையில் போட்டுள்ளீர்கள். இனியும் தமிழர்களாகிய எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget