பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அரச புலனாய்வு தகவல்கள் ஊடகங்களின் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதனை தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுவரையில் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரிகள் என்பதோடு, தற்போது சேவையிலுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவரையும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, அவர்களது செயற்பாடுகள் தொடர்பான பொறுப்பினை தானே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
நேற்று இரவு இடம்பெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment