நாங்கள் இந்த நாட்டில் மட்டும்தான் சிறுபான்மையினர். ஆனால் உலகளவில் நாம் பெரும்பான்மையினர். எம்மை இலகுவாக அடக்கி ஒடுக்கி விட முடியும் என யாரும் நினைத்து விடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எச்சரித்துள்ளார்.
ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியமை பெரியவிடயமல்ல. ஆனால் ரவூப் ஹக்கீம், கபீர் காசிம் ஆகியோர் பதவி விலகியமையே பாரிய விடயம். அவர்கள் எமது சமூகமன்றி சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்றே வெற்றியீட்டியவர்கள்.
அவர்கள் எங்களுக்காகவும் ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களுக்காகவும் பதவி விலகினார்கள். ஆகவே எங்களுடைய ஒற்றுமை என்பது சாதாரண விடயமல்ல. நான் ஜனாதிபதி மைத்திரிக்கு 2 வார கால அவகாசம் கொடுத்துள்ளேன். என் மீதான குற்றச் சாட்டுக்களை உடனடியாக விசாரணை செய்து நிரூபிக்க வேண்டும் என கோரியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment