இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான ஓட்டெடுப்பு 15-ந்தேதி நள்ளிரவில் நிறைவடைந்தது.
நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று விளாடிமிர் புதின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத ஓட்டுகளை பெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத ஓட்டுகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர்.
Post a Comment