இலங்கைக்கு வந்தவுடன் இலவசமாக கட்டணம் எதுவுமின்றி விசாவை பெற்றுக்கொள்வதற்கான சலுகையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தீர்மானம் அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டது.grand free on – arrival visa நடைமுறையை முன்னர் 35 நாடுகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் பின்னடைவை கண்டிருந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் தற்போது இந்த சலுகையை 45 நாடுகளுக்கு விரிவுப்படுத்தியுள்ளது.
இந்த சலுகை நடைமுறை கடந்த மே மாதம் அமுல்படுத்தபடவிருந்தது. உயிர்த்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுற்றுலா தொழிற்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த நாடுகள் தொடர்பான விபரங்களை அமைச்சரவையில் சமர்பித்தார்.
இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விசா நடைமுறை பின்வரும் நாடுகளுக்கு ஏற்புடையதாகும்.
அவுஸ்ரேலியா
ஒஸ்ரியா
பெல்ஜியம்
பல்கேரியா
கம்போடியா
கனடா
சீனா
சைப்பிரஸ்
டென்மார்க்
எஸ்டோனியா
பின்லாந்து
பிரான்ஸ்
ஜேர்மனி
கிறீஸ்
கங்கேரி
ஐஸ்லாந்து
இந்தியா
அயர்லாந்து
இத்தாலி
ஜப்பான்
லத்வியா
லக்சம்பேர்க்
மல்டா
மலேசியா
நெதர்லாந்து
நோர்வே
நியசிலாந்து
பிலிப்பைன்ஸ்
செக்குடியரசு
போலந்து
போர்த்துகல்
லிதுவேனியா
ரோமனியா
ரஷ்யா
சிங்கப்பூர்
ஸ்லோவீனியா
தென்கொரியா
குரோஷியா
ஸ்பெயின்
சுவீடன்
லத்வியா
சுவிஸ்லாந்து
தாய்லாந்து
ஐக்கியராச்சியம்
ஐக்கியஅமெரிக்கா
Post a Comment