கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை இம்முறை ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவடையும். இப்பரீட்சை புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரு பரீட்சைகளாக நடைபெறும்.
இம்முறை புதிய பாடவிதானத்தின் அடிப்படையில் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 239 பேரும் பழைய பாடவிதானத்தின் அடிப்படையில் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பேரும் தோற்றவுள்ளார். இதனடிப்படையில் மொத்தம் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Post a Comment