Ads (728x90)

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக நேற்று சாய்ந்தமருது பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட44 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 21 மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனர். மேலும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

450 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் குறித்த பாடசாலை உணவகத்திலும், மற்றும் பாடசாலையினாலும் உணவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

திடீரென மாணவர்கள் பலரும் வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்று கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget