Ads (728x90)

நேற்று இடம்பெற்ற 44-வது லீக் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் திமுத் கருணரத்னே துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்நிலையில் 50 ஓவர்கள் நிறைவில் இந்திய அணிக்கு 265 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட், புவனேஸ்வர் குமார், பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 189 ஓட்டங்களை சேர்த்தனர். உலகக்கோப்பை தொடரில் தனது 5-வது சதத்தை ரோகித் சர்மா பதிவு செய்தார். இந்நிலையில் 103 ஓட்டங்களை பெற்ற நிலையில் அவர் வெளியேறினார்.

இதையடுத்து ராகுல் 111, ரிஷப் பந்த் 4 என வெளியேறினர். இதனையடுத்து விராட் கோலி, பாண்டியா அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை பெற்று கொடுத்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget