பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டதையடுத்து ஆரம்பமாகியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே தமிழர் திருவிழா பொங்கல் உற்சவங்கள் ஆரம்பமாகி இருக்கின்றது.
நூற்றுக்கு மேற்பட்ட பொலிஸார் கொண்டுவந்து குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றுள்ளன.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகிறது. 108 பானையில் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
பொங்கல் விழாவிற்கு பொலிசார் இடையூறு விளைவிப்பதை போல நடந்து கொண்டாலும், திட்டமிட்டபடி பொங்கல் நிகழ்வுகள் நடந்து வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அங்கு பொங்கல் ஏற்பாடுகள் நடந்தபோது, ஆலயத்தில் சட்டவிரோதமாக கட்டடம் அமைத்து தங்கியுள்ள பௌத்த பிக்குவின் கட்டடத்திற்கு அருகில் பொங்கல் பானைகள் வைக்கக்கூடாது என பொலிசார் அறிவுறுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment