
சுய ஜாதக ரீதியாக, லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதும் லட்சுமி யோகத்தை ஏற்படுத்துகிறது.
செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி சம்பந்தப்பட்ட இந்த யோகம் சுக்கிரனின் வலிமையைக்கொண்டு தீர்மானம் செய்யப்படுகிறது. சுய ஜாதக ரீதியாக லட்சுமி யோகம் அமையப்பெற்றவர் பெரும் செல்வ நிலையை அடைந்து, அரசருக்கு சமமாக இருப்பார் என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், அனைவராலும் மதிக்கப்படத்தக்க வகையில் நற்குணங்கள் உடையவராகவும், தோற்றத்தில் அழகாகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
Post a Comment