Ads (728x90)

பிரேமதாஸ மைதானத்தில் இடம் பெற்ற இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா 111 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் 48 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் சைபுல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அதன் அடிப்படையில் இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 338 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget