பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் நாட்டை எந்த விதத்திலும் முன்னேற்ற முடியதென அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து இன மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம் என தெரிவித்த அவர் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் முன்னின்று செயற்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு கூறினார்.
எமது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து இன, மத மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் வந்த எந்த தலைவர்களினாலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. அது எமக்கு பெரும் துரதிஸ்டமாக அமைந்தது. நாட்டில் அனைத்து மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய வகையில் பிளவுபடாத நாட்டில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சகல மக்களும் சமமாக நடத்தப்படும் அரசியலமைப்பு எமக்கு அவசியமாகிறது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏற்கனவே சமஷ்டி முறை யோசனையாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு சமஷ்டி முறை இங்கு யோசனையாக முன்வைக்கப்பட்டது என மேலும் தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment