Ads (728x90)

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

மேலும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள ரிஷாட்டுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget