Ads (728x90)

21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது.

அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget