கவினை கடந்த வாரம் ஏமாற்றிவிட்டதாக கூறி காய்ச்சி எடுத்த லாஸ்லியா மீண்டும் அவருடன் க்ளோஸாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் லாஸ்லியா நாளுக்கு நாள் மக்களிடம் பெற்றுள்ள பெயரை கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார் லாஸ்லியா. பின்னர் அத்தனை ஆண்கள் உள்ள பிக்பாஸ் வீட்டில் கவினுடன் மட்டும் மிகவும் க்ளோஸாக இருந்தார். கவின் என்ன சொன்னாலும் கெக்கபிக்க என சிரித்தே காரியத்தை சாதித்தார்.
கவின் தன்னிடம் வழிகிறார் என்று தெரிந்தும் பதிலுக்கு லாஸ்லியாவும் நல்லாவே வழிந்து வருகிறார். கவின், சாக்ஷியை காதலிக்கும் விஷயம் தெரிந்த பிறகு, எங்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறாய். நீ செய்தது பெரிய தப்பு, அது இது என்று வியாக்கியானம் பேசினார் லாஸ்லியா.
அதற்கு பிறகு ஒரு நாள் கவினுடன் பேசாமல் இருந்ததாக தெரிகிறது. பின்னர் மீண்டும் கவினிடம் வழியத் தொடங்கிவிட்டார் லாஸ்லியா. எல்லோருக்கும் முன்பாக நேருக்கு நேராகவே நான் உன்னை சைட் அடிக்கிறேன் என வெட்கமே இல்லாமல் கூறி வழிந்தார் லாஸ்லியா.
தான் அப்பா அப்பா என்று அழைக்கும் சேரன் மீது மீரா அப்படி ஒரு குற்றச்சாட்டை கூறிய பின்னரும் மீராதான் பெஸ்ட் பர்ஃபாமர் என்று வரிந்துக்கட்டிக்கொண்டு வந்தார். ரேஷ்மா சேரனிடம் நீ தான்டா லூசு என்று கூறியபோது கூட அதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தார் லாஸ்லியா.
நேற்றும் கூட கமல்ஹாசனுடன் பேசிய பிறகு கவினின் கையை கோர்த்துக் கொண்டு நடந்தார் லாஸ்லியா. சாக்ஷியும் கவினும் கறுப்புக்கலர் டிரெஸ் போட்டதால் ஹவுஸ்மேட்ஸ்கள் அவர்களை கலாய்த்தனர். இதனை கவனித்த லாஸ்லியா நேற்று கவின் போட்ட வெள்ளைக்கலர் சட்டையை தெரியாமல் போட்டது போல் போட்டு கலாய்க்க மாட்டார்களா என ஏங்கினார்.
இப்படி மாறி மாறி பேசுவது, கவினிடம் வழிவது என நாளுக்கு நாள் தனது பெயரை பெரிதும் டேமேஜ் செய்து வருகிறார் லாஸ்லியா. லாஸ்லியா ஆர்மியினரே என்ன கொடுமைடா இது என யோசிக்கும் வகையில் நடந்துகொள்கிறார் லாஸ்லியா. தெரியாமல் இப்படி நடந்துகொள்கிறாரா லாஸ்லியா அல்லது இப்படிதான் விளையாட வேண்டும் என விளையாடுகிறாரா என்பது அவருக்குதான் தெரியும்!
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment