பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டரை வாழ்த்தியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன். பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாண்டி மாஸ்டர் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைக்கிறார். அவர் காமெடி என்ற பெயரில் தங்களை கிண்டல் செய்வது சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை.
நேரம் கிடைக்கும்போது எல்லாம் பிக் பாஸையே கிண்டல் செய்கிறார் சாண்டி. இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக் காட்சி இருந்தது. ஜீவி(பிரகாஷ் குமார்) நடன இயக்குநராக யாரை போடப் போகிறீர்கள் என்று கேட்டார். பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன். நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச் சொன்னேன்.
சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார். படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன். நடனக் காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார். படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.
அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது. வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள். ஜெயில் காத்திருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment