மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வரையான புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டன. அவற்றை தமிழர்கள்தான் செய்கிறார்கள் என இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் அதை செய்தது முஸ்லிம் தீவிரவாத குழுக்கள் என்பதை இப்போது அறிந்துள்ளோம் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மங்களராம விகாரையில் நடந்த பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆதாரங்களை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் 63 அரச மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு விட்டதாகவும், அவற்றை காப்பாற்ற தான் வீதியோரத்தில் உறங்கியதாகவும் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment