இன்று காலையில் கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் சற்று முன்னர் வரை நீண்டநேரமாக நீடித்தது. இதில் அரசுக்கு எதிராக வாக்களிப்பதில் எந்த இலாபமுமில்லை என அனேகமான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசை வீழ்த்துவதால் எந்த பலனும் கிடைக்காதென உறுப்பினர்கள் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
எனினும் கூட்டமைப்பின் ஆதரவிற்காக கல்முனை விவகாரத்தையாவது பிரதமர் நிறைவேற்றித்தர வேண்டுமென எம்.பிக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசி உத்தரவாதத்தை பெறும் முயற்சியில் கூட்டமைப்பு இறங்கியது.
பின்னர் பிரதமரை கூட்டமைப்பின் குழுவொன்று சந்தித்தது. இங்கு கல்முனையை தரமுயர்த்துவதற்கான உறுதிமொழியை இரண்டாவது முறையாக எழுத்துமூலம் பிரதமர் வழங்கியுள்ளார். கல்முனையை தரமுயர்த்துவது குறித்து பிரதமர் ஏற்கனவே எழுத்துமூலம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment