பாராளுமன்றத்தில் நேற்று யாழ் மாவட்ட எம்.பி.டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட வடக்கு ரயில்பாதை விபத்துக்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், வடக்கு ரயில் பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களை தடுப்பதற்காக ரயில் கடவைகளில் பொலிஸாரினால் உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்கள் முன்னர் போல் 30,40, கிலோமீற்றர் வேகத்தில் பயணிப்பதில்லை. தற்போது 100, 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன. நாம் இது தொடர்பில் அறிவித்தல் பலகைகளை வைத்துள்ளோம். இதனை வாகன சாரதிகளும் பொது மக்களும் கவனத்தில் கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment