இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதோர் ஆட்சியை நிச்சயம் மக்களுக்கு வழங்குவோமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் பாவநாசபுரம் மற்றும் தொல்காப்பிய நகர் ஆகிய மாதிரிக்கிராமங்கள் கையளிப்பு நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் இன-மதரீதியான ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. அதாவது வர்க்கம், ஜாதி, பழங்குடி ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட ஆட்சியை முழுமையாக நிராகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் நாடு பன்மடங்கு வளர்ச்சியடைய வேண்டும்.
அவ்வாறு நாட்டில் சிறந்த வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தொரு நல்லாட்சியை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என சஜித் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment