Ads (728x90)

உலக பொதுமறையான திருக்குறளுக்கு ஓர் உயரிய இடத்தினை வழங்கி அதன் பெருமையினை இலங்கையர் அனைவரும் அறிய வைக்கின்ற முயற்சியின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இவ்வாறு ஆவணி முதல்வாரம் திருக்குறள் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எடுக்காத முயற்சியையே ஜனாதிபதி எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல்வேறு சமயங்களுக்குப் பொதுவான அறநெறிகளைத் திருக்குறள் வலியுறுத்துவதன் பிரகாரம்தான் இந்த முயற்சியை ஜனாதிபதி எடுத்துள்ளார். தென்னிந்தியாவிலிருந்து முக்கிய அதிதிகளும் திருக்குறள் வார நிகழ்வுகளுக்காக அழைக்கப்படவுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget