Ads (728x90)

அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சரவை அந்தஸ்துள்ள, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்றனர்.

1. ரவூப் ஹக்கீம் - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர்
2. ரிஷாத் பதியுதீன் - கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி அமைச்சர்
3. அமீர் அலி செய்யத் முஹம்மத் சிஹாப்தீன்- விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்
4. அப்துல்லாஹ் மஹ்ரூப்- துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் பிரதி அமைச்சர்
5. புத்திக பத்திரண- கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சர்

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மெளலான, பைஷல் காஷீம் ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget