வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புத்தக திருவிழாவை யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
யாழில் முதன்முறையாக மிகப்பிரமாண்டமாய் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் புத்தகக்கண்காட்சியானது எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி வரை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த புத்தக கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்து படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளுர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment