ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாநாட்டில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்ககூடாது என கட்சியின் நாடாளுமன்றக்குழு தீர்மானம் எடுத்திருந்தது. ஆனால் மேற்படி தீர்மானத்தைமீறி பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் எஸ்.பி. திஸாநாயக்க பங்கேற்றிருந்தார். இதனையடுத்தே அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்த மஹிந்த சமரசிங்கவும் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment