Ads (728x90)

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் முகமாக பதுளை வில்ஸ்பாக் மைதானத்தில் இடம்பெற்ற இந்நிழ்வை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் எதிர்கால ஜனாதிபதியே வாழ்க! எங்கள் தலைவரே வாழ்க! போன்ற கோஷங்களுடன் சஜித் பிரேமதாசவிற்கு மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காத போதிலும், பெரும் ஆரவாரத்துடன் சஜித் பிரேமதாசவை மக்கள் வரவேற்றனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாச தனது வாகனத்தில் இருந்து இறங்கிய இடத்திலிருந்து பேரணி மேடை வரையும் தமது எதிர்கால ஜனாதிபதி சஜித் பிரேமதாச என்று கோசம் எழுப்பியவாறு மக்கள் அவரை தூக்கி சென்றனர்.

நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன். தந்தைபோல் நாட்டுக்காக நடுவீதியில் உயிரைத் தியாகம் செய்யவும் தயார் என இன்று பதுளையில் நடந்த பிரமாண்ட பேரணியில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு சூளுரைத்தார்.

உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாடு அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் அது சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், உள்ளூர் தொழிலதிபரை பலப்படுத்த வேண்டும், எங்கள் வணிகத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும், நாட்டின் செல்வத்தை உருவாக்கும் முறையை முன்னேற்ற வேண்டும்.

இளைஞர்களைக் கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும். இளைஞர்களின் எண்ணங்களுக்கும் இலட்சியத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். புதிய தொழிநுட்பத்துடன் நாங்கள் உலகை வெல்லவேண்டும்.

நாட்டை நிர்வகிக்கும்போது சரியான தேசிய கொள்கை வேண்டும். நாட்டை கைத்தொழில் யுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை விருத்தி செய்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் கல்வியையும், சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இராணுவ மட்டுமல்ல பொருளாதார, சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு, புலனாய்வுத்துறை மேம்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்பட வேண்டும்.

நாட்டின் இறையாண்மையை நாங்கள் பாதுகாப்போம். நாட்டைப் பிரிக்க எந்தச் சக்திக்கும் இடமளிக்கமாட்டோம். இன, மத பேதமற்று செயற்பட்டு புதிய இலங்கையை உருவாக்குவோம். வெளிநாட்டு சக்திகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படும் எதிலும் கையொப்பம் இடமாட்டோம் என மேலும் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget