Ads (728x90)

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைத்தான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அதன்பின் அனைத்து விடயங்களிலும் நாடு பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனால் இப்போது மீண்டும் நாட்டை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் மீண்டும் பொறுப்பேற்கப்போவது 2015 நாம் அவர்களிடம் கொடுத்த நாட்டை அல்ல.

2005ஆம் ஆண்டு நாங்கள் பதவிக்கு வந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படித் தான் தற்போதும் நாடு இருக்கின்றது. மீண்டும் இந்த நாட்டை கட்டியெழுப்ப எம்மால் முடியும்.

2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபோது முப்பது ஆண்டு கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. புகையிரதங்களில் சுதந்திரமாக கொழும்பிற்கு வரமுடியும் என வடக்கு மக்கள் யாரும் நினைக்கவேயில்லை.

ஆனால் அத்தனையையும் எம்மால் செய்ய முடிந்தது. அதேபோன்று எதிர்காலத்திலும் எம்மால் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget