இதற்கான திகதி, நேரத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி திகதி வழங்கிய பின்னர் அவர் தெரிவுக்குழுவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதி தெரிவுக்குழுவில் முன்னிலையாகாவிட்டாலும் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இக்குழுவில் இதுவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஆயுட் காலம் ஓகஸ்ட் 23ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் செப்ரெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment