Ads (728x90)

பலாலி சர்வதேச விமானநிலைய நிர்மாணப்பணிகளின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பு தொடர்பில் மாவை சேனாதிராஜா தெரிவித்ததாவது, இந்நிலையில் விமானநிலையத்தில் தற்போதைய நிலைவரம் குறித்து பிரதமருடன் இச்சந்திப்பில் கலந்துரையாடினோம். அவ்வகையில் விமான ஓடுபாதை மற்றும் விமான நிலையத்திற்கு எந்த வீதியைப் பயன்படுத்துவது, அவ்வீதிகளின் உட்கட்டமைப்புக்கள் பூர்த்தி செய்வது ஆகியவற்றை நிறைவுசெய்து எதிர்வரும் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை மக்களின் பாவனைக்காகத் திறந்துவைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget