Ads (728x90)

கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்தமையானது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் எனவும், எந்தவொரு நபரும் அழகான சொற்பிரயோகங்களை மேற்கொண்டாலும், அழகாகப் பேசினாலும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும் எனவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சகோதரர்களுடனும் ஏனையோர்களுடனும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவுதற்கு 9 வருடங்கள் முழுமையாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு ஊழல்மிக்க அரசாங்கத்தை மாற்றியமைப்பதற்காகவே மக்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்ததாக சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.








Post a Comment

Recent News

Recent Posts Widget