முகத்தை மாற்றுவதால் மட்டும் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.10 வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் ஐந்து வருடங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவார்களா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் விசேட சக்தி ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார்.
Post a Comment