13ஆவது திருத்தத்திற்கு அமைவாக பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களிடம் இதுதொடர்பாக தெளிவூட்டி, இலகுவாக இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இங்கு மேலும் தெரிவிக்கையில், 80களில் இருந்த நிலைமை தற்போது இல்லை. நாம் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள். எமக்கு தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைத் தொடர்பாகவும் நன்றாக தெரியும்.
எனவே தமிழர்களின் காணிகளை அரசாங்கத்துக்கு சொந்தமாக மாற்றவோ, அதனை அபகரித்து வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ நாம் எந்தக் காரணம் கொண்டும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. தமிழர்களுக்கு தேவையான அரசியல் உரிமையையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது தற்போதைய நிலைமையில் அவசியமாக இருக்கிறது.
அதாவது 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி மற்றும் பொலிஸ் உட்பட அனைத்து அதிகாரங்களையும் தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட யோசனையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றே கருதுகிறேன் எனவுமு் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment