Ads (728x90)

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் குறித்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கலையும் நாட்டி வைத்தனர்.

குறித்த இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவு, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget