ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஆரம்பமான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஜி.எல். பிரிஸினால் அக்கட்சியின் தலைமத்துவப் பதவி மஹிந்த ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இதேவேளை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இம்மாநாட்டில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புபட்ட அனைத்து அரசியற் கட்சி பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment