மக்களவை உறுப்பினர்களிடையே மிண்ணனு வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
மக்களவையில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார். அமித்ஷா பேசியதாவது, ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பரப்பப்படும் வதந்திகளை நம்பாதீர்கள்.
வெறும் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சட்டப்பிரிவை நாங்கள் நீக்கியுள்ளோம். ஜம்மு காஷ்மீரில் எந்த சட்ட, ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படவில்லை. தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீர் மக்கள் நலனுக்காக சிறப்பு திட்டங்களை அறிவிப்போம் எனவம் தெரிவித்தார்.
Post a Comment