மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படும் இவ்வாலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண மகரிசி நற்பணி மன்றத்தினர், இவ்வாலயம் குறித்த வரலாற்று பொக்கிஷங்களை தேடித்தொகுத்து ஆலயத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.
1900 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் தம்மங்கடவையிலிருந்து வந்தாறுமூலை வரையான போக்குவரத்து பாதையில் மாந்திரை ஆற்றங்கரையில் மதுரை மரத்தின் கீழ் இந்துக்களால் வைத்து வளிபடப்பட்ட ஆலயமே இந்த ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம்.
இந்த வரலாற்றுப் பொக்கிசமான ஆலயத்தை புனரமைத்து வழிபாட்டுக்கு உரிய தலமாக மாற்றுவது இந்துக்களின் பாரிய கடமையாகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment