Ads (728x90)

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு, 2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப் பெற்றது. கடந்த 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோத்தபாய ராஜபக்ஷ, அதனை இரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய போட்டியிடுவதற்கு அவர் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்யக்கோரி கோத்தபாய அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3 ஆம் திகதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget