காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். தேர் திருவிழாவை காண உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பெரும் அளவிலான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டுள்ளனர்.
நாளைய தினம் காலை 7 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதோடு, மாலை 5 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment