வடக்கிலுள்ள மக்களோ, மக்கள் பிரதிநிதிகளோ எம்மோடு இணைந்து கொண்டுதான் தீர்வை நோக்கி நகர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும், தங்களுக்கு எதிராகச் சென்று பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதையும் தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் நேற்று பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மக்களுக்கு இப்போது எது தேவையோ அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல் எம்மிடமிருந்து அந்தத் தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment