Ads (728x90)

யாழ். தீவகப்பகுதிகளிலிருந்து நோயாளிகளை கொண்டு செல்வதற்காக 15 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன அம்பியூலன்ஸ் படகுகள் இரண்டை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.

வட மாகாணத்தின் சமகால சுகாதார மேம்பாடுகளை அவதானிக்கும் முகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண நேற்றுமுன்தினம் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார். இதன்போது அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நெடுந்தீவு மாவட்ட மருத்துவமனை, நயீனாதீவு மாவட்ட மருத்துவமனை, அனலைதீவு பிராந்திய மருத்துவமனை, ஊர்காவற்றுறை ஆரம்ப மருத்துவமனை மற்றும் வேலணை பிராந்திய மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதார மேம்பாட்டு திட்டங்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

நெடுந்தீவு மாவட்ட மருத்துவனையில் ரூ.18.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மகப்பேறு கிளினிக் கட்டடத் தொகுதி, ரூ.7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள நோயாளர் விடுதி, ரூ.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரேத அறை, ரூ.6 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியர்களுக்கான வீட்டுத்திட்டம் என்பவற்றை இதன்போது சுகாதார அமைச்சர் பார்வையிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget