அரசாங்க பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் விநியோக நடவடிக்கை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று முற்பகல் 10.30மணியளவில் ஹோமாகம பிட்டிபனவிலுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்கள களஞ்சிய வளாகத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் தலைமையில் இடம்பெற்றது.
இலவச பாடப் புத்தகங்களை வழங்குவதற்காக, அரசாங்கம் ரூ. 4,165 மில்லியனை ஒதுக்கியுள்ளதோடு, 448 வகையான புத்தகங்களின் 43 மில்லியன் பிரதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதில் தரம் 01முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களும், 12 ஆம் வகுப்புக்கான பொது ஆங்கில புத்தகங்களும் உள்ளடங்குவதோடு, பிரிவேனா மாணவர்களுக்கான தரம் 01முதல் 05வரையான 54 வகையான புத்தகங்களும் உள்ளடங்குகின்றன.
2019 பாடசாலை விடுமுறைகள் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2020 கல்வியாண்டிற்கான பாடநூல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடுகளை வழங்குமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment