Ads (728x90)

கடந்த சில தினங்களாக நாட்டின் தெற்கு, மத்திய, மேல், சப்ரகமுவா மாகாணங்களில் இடியுடன் கூடிய பாரிய மழை பெய்துள்ளது. சுமார் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்நிலை தொடர்கின்றது.

பாரிய மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட காலி, களுத்துறை, மாத்தறை உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மண்சரிவு எச்சரிக்கை காணப்படும் பகுதிகளில் இருந்து முப்படையினரின் உதவியுடன் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்துமாறும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரண நடவடிக்கைகளுக்கான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு தயங்க வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget