Ads (728x90)

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள், மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது எனவும் ஆளுநர் சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டு  வரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன், அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள்ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget