வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் ”வடக்கின் குரலிசை 2019” கான தேர்வு நடைபெறவுள்ளது.
இசைத்துறையில் சாதிக்க நினைக்கும் வடமாகாண இளைஞர் யுவதிகளை ஊக்குவிக்கும் முகமாக கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவில் நடைபெறவுள்ள இந்த குரலிசை தேர்வில் 15 வயது முதல் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் கலந்து கொள்ளமுடியும்.
சாஸ்திரீய சங்கீதம் ,மெல்லிசைப்பாடல், கிராமியப்பாடல்களை உள்ளடக்கிய தமிழர் பண்பாட்டிற்கு அமைவானதாக போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 12, 2019 ந்திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பப்படிவங்களை ‘வடக்கின் குரலிசை’ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கான விண்ணப்பப்படிவங்கள் ஆளுநர் செயலகம் மற்றும் வடமாகாண சபையின் np.gov.lk இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment