Ads (728x90)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எவருக்கு ஆதரவு வழங்கும் என்ற கேள்விக்கான பதில் 2020 இல் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் என்பதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  68 ஆவது தேசிய மாநாட்டில் தெரிவித்தார்.

பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன்  இணைந்து மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் தரப்பினரும் குற்றவாளி கூண்டுக்கு செல்ல தயாராகுங்கள் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் செயற்பாடு இன்று  மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் நோக்கம் எவருக்கும் இல்லை. ஆட்சிகாலத்தில் எவ்வளவு நிதி திரட்டிக் கொள்ள வேண்டும் என்ற விடயத்தில் மாத்திரமே கவனம் செலுத்துகின்றார்கள்.

நாட்டு மக்களின் தேர்தல் உரிமை இன்று அதிகார பூர்வமாக மீறப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே முழு பொறுப்பினையும் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget