தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகையை 500 ரூபாவாவிலிருந்து 750 ரூபா வரை 50 வீதத்தினால் அதிகரிக்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கையின் பொருட்டு வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிக்க கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்த உதவித்தொகை தரம் 6முதல் க.பொ.த. உயர்தரம் வரையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சுதந்திர கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படுகின்றது.
இதன் மூலம் தற்போது வருடமொன்றுக்கு உதவித்தொகை பெறும் சுமார் 130,000 மாணவர்கள் நன்மையடையவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment