Ads (728x90)

ஸ்ரீ தேவியின் மெழுகு சிலையை சிங்கப்பூரிலுள்ள மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் திரைப்பட தயாரிப்பாளரும், அவரது கணவருமான போனி கபூர் திறந்து வைத்தார்.

இந்த மெழுகு சிலை 1987 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் இடம் பெற்ற ஸ்ரீதேவின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ், சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர் ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன.

நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன. மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget