Ads (728x90)

 பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது வழங்கினர். இந்த வீட்டில் பச்சோந்தி போன்று போலியானவர் விருது லாஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை சாக்‌ஷியிடமிருந்து வாங்கி தூக்கி எறிந்தார் லாஸ்லியா. இதனால் லாஸ்லியாவை கண்டித்தார் மோகன் வைத்யா.

இதையடுத்து, எனக்கு விருது கொடுக்க விருப்பமில்லை என்று சாக்‌ஷி தெரிவிக்க, லாஸ்லியா, சாக்‌ஷி இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. தனது மகளை பச்சோந்தி என்று அழைத்த விருந்தினர்களை சேரன் கடுமையாக கண்டித்தார். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, நரி – சாண்டி, மின்மினிப்பூச்சி – ஷெரின், கிளி – முகென், கொசு – வனிதா, கழுகு – தர்ஷன், தவளை – கவின், சேரன் – யானை, கழுதைப்புலி – வனிதா, லாஸ்லியா – நாய், பச்சோந்தி, பசு – வனிதா, ஆகியவற்றோடு, அடுத்தவரை சார்ந்து வாழும் அட்டை விருது அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget