Ads (728x90)

யாழ்ப்பாண மாநகரசபைக்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் இரண்டாம் முறையாக நாட்டப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரண்டாம் முறையாக நாட்டி வைத்தார். 2,350 மில்லியன் ரூபா செலவில் மாநகரசபை கட்டிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2014 இல் அப்போதைய அமைச்சர் பசில் ராஜபக்சவும் நிரந்தர கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மேல்மாகாண, நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget