Ads (728x90)

அப்பிள் நிறுவனத்தின் 15 அங்குல “மக்புக்” மடிக்கணனியை ஸ்ரீலங்கன் விமான சேவை விமானங்களில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த மடிக்கணனியை விமான பயணிகள் தமது கைப்பையிலோ அல்லது வேறு பொதிகளிலோ கொண்டு செல்ல முடியாதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கணனியின் மின் கலத்தில் இருக்கும் கோளாறு காரணமாக தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாலேயே இவ்வாறு தடை விதிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.

இதேவேளை ஏற்கனவே பல விமான சேவைகளில் குறித்த மக்புக் கணணியை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget