Ads (728x90)

ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்து விட்டனர். அனேக மக்களின் எதிர்பார்ப்பாகவும் சஜித் பிரேமதாசாவே இருக்கின்றார். இனி அவரை கட்சி தான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர யாழில் தெரிவித்துள்ளார்.

என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் யாழ். புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய அமைச்சர் மங்கள சமரவீர அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஐனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை மக்கள் தெரிவு செய்து விட்டனர். அனேக மக்களின் எதிர்பார்ப்பாகவும் சஜித் பிரேமதாசாவே இருக்கின்றனர். அதே நேரத்தில் இனி அவரை கட்சி தான் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்த பின்னர் அவரின் வெற்றிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும்.

நான் புகையிரதத்தில் வருகின்ற போது இரு பக்கமும் அமைச்சர் சஜித் பிரேமதாசா முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பிலே பதாகைகளும் போஸ்ரர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அவ்வாறு அவர் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் மக்கள் அவரை எதிர்பார்க்கின்றனர்.

இதேவேளை யாழில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சிக்கு ஏனைய இடங்களை விட பிரமாண்டமான முறையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள விடயங்கள் இருக்கின்றது. எனவே இதற்கு அனைவரும் வந்து அதனைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget